சென்னை,

திமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தை தொடர்ந்து தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது.

புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த புதிய அமைச்சரவையில் துணைமுதல்வராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார்.

துணைமுதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர் செல்வதுக்கு  நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்காக முதல்வர் ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சராக பதவியில் நீடிப்பார்.

மேலும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டுவசதித்துறை பறிக்கப்பட்டு ஓபிஎஸ் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர் மா.பா.பாண்டியராஜனுக்க,  தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் மாலை 4.40 மணிக்கு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்க ஓ.பன்னீர் செல்வத்தையும், அவரது பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கும் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து,  ஓ.பன்னீர் செல்வத்துக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 4.45 மணி அளவில் ஓபிஎஸ்சின் பதவி ஏற்பு நிறைவுபெற்றது.

அதைத்தொடர்ந்து மா.பா.பாண்டியராஜன் பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவருக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 4.50 மணி அளவில் அவரது பதவி ஏற்பும் நிறை வடைந்தது.

பதவியேற்ற புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சக அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைபெற்றது. சுமார் 10 நிமிடத்திற்குள் பதவு ஏற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

அதைத்தொடர்ந்து இதுவரை 31 பேர் இருந்த தமிழக அமைச்சரவை 33 பேர் கொண்ட அமைச்சரவையாக உயர்ந்துள்ளது.