சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சுமார் 20 நிமிடம் சந்தித்து பேசினர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான, அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை உள்பட 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார், இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்துகொள்ளாது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. மீடியாக்களும் இருவருக்கும் மோதல் என செய்தியை வெளியிட்டது. ஆனால், எடப்பாடியோ, இருவருக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார்.,

இந்த நிலையில், இன்று காலை  சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஒ.பன்னீர் செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துபேசினார். இந்த சந்திப்பு சுமார் 20நிமிடம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.