சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை டில்லி செல்கிறார். அங்கு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக பேச இருக்கிறார்.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக ஓபிஎஸ் அதிமுக தனியாகவும், சசி அதிகமுக தனி அணியாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அறிவித்தார். அதைத்தொடர்ந்த ஓபிஎஸ் ஆதரவு எம்.பிக்கள் மைத்ரேயன் தலைமையில் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷ னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதற்கு விளக்கம் கேட்டு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் அளித்த பதில் சரி யில்லை என்று, மீண்டும் விளக்கம் கோரியது.

அதையடுத்து 70 பக்கங்கள் கொண்ட பதில் அறிக்கையை சசிகலா சார்பாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

அதற்கு 61 பக்கம் பதில் மனுவை தயார் செய்துள்ளது ஓபிஎஸ் அணி. அதை நாளை தலைமை தேர்தல் கமிஷனில் கொடுத்து விளக்கம் அளிக்க உள்ளார்.

அப்போது, அதிமுகவின் சின்னமான இரட்டைஇலை சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுப்பார் என கூறப்படுகிறது.

நாளை பகல் 12 மணிக்கு டில்லி செல்லும் ஓபிஎஸ், நாளை மாலை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் உடன் செல்கிறார்கள்.