சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வரும் நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வீறுகொண்டெழுந்த நிலையில், எடப்படி பழனிச்சாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஒபிஎஸ் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் தனது முக்குலத்தோர் சாதி சங்கங்கள் மற்றும்  தமிழகஅரசின் மறைமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதையடுத்து, இன்று மாலை  சென்னையில் உள்ள ஓட்டலில் ஓபிஎஸ் த னது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் வழக்கு விவகாரம்,  தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளம் திட்டம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆதரவாளர்களுடன் தனது சுற்றுப்பயணம் தொடர்பாக தனி  ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]