ஜெயலலிதா மரண மர்ம விவகாரம் குறித்து விசாரித்தால், ஓ.பி.எஸ்.தான் முதலாம் குற்றவாளியாக (ஏ – 1) விசாரிக்கப்படுவார் என்று அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தற்போது தந்தி தொலைக்காட்சியில் டி.டி.வி. தினகரன் பேட்டி ஒளிபரப்பாகி வகிறது. அப்போது தினகரனிடம், “ஜெயலலிதா கன்னத்தில் இருந்த புள்ளி எங்களுக்குத் தெரியாது என்று சுதா சேசய்யன் தெரிவித்தாரே..” என்று கேட்கப்பட்டபோது,
“மருத்துவர்கள் சிகிச்சையின் காரணமாக அந்த புள்ளிகள் ஏற்பட்டிருக்கும்” என்றார்.
மேலும், “அப்பல்லோவில் இருந்த 27 சிசிடிவிக்கள் அகற்றப்பட்டது குறித்து அப்பல்லோ நிர்வாகத்திடம்தான் கேட்கவேண்டும்.
ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசே இது குறித்து நீதி விசாரணை நடத்தினால், அரசாங்கம் கையில் இருப்பதால் விசாரணை நேர்மையாக இருக்காது என்பார்கள். ஆகவே . மத்திய அரசே நீதி விசாரணை நடத்தட்டும். அதை வரவேற்கிறோம்.
அப்படி விசாரணை கமிசன் வைக்கப்பட்டால், முதல் விசாரணையே ஓ.பி.எஸ்.தான் ஏ.1 ஆக (முதல் குற்றவாளியாக) விசாரிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.