சென்னை: முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சிதலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை தனியார் மருத்துவமனைனியில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது.
அதிமுக துணைஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இன்று காலை அரும்பாக்கம் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இவருக்கு ஏற்கனவே அந்த மருத்துவமனையிர்ல குடலிறக்கம் சம்பந்தமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில், மேற்பரிசோதனை செய்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.