டில்லி

பி விவசாயிகள் கொலை விவகாரத்தில் தொடர்புள்ள இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியைப் பறிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தி உள்ளனர்.

உபி மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பேரணி நடத்திய விவசாயிகள் மீது ஜீப் மோதியதில் 4 பேர் உயிர் இழந்தனர்.  இந்த ஜீப்பில் இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்துள்ளார்  விசாரணையில் இ ந்த சம்பவம் திட்டமிட்டு நடந்த படுகொலை என அறிவிக்கப்பட்டு தற்போது ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியைப் பறிக்க எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டன.   ஆனால் மத்திய அரசு இதற்குச் செவி சாய்க்கவில்லை.  இதனால் டில்லியில் இதே கோரிக்கையை வலியுறுத்தியும் அஜய் மிஸ்ராவின் பதவியைப் பறிக்காததைக் கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர்.

இந்த பேரணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி விஜய் சௌக் என்னும் இடம் வரை நடந்தது.  இதில் பேசிய ராகுல் காந்தி, “சிறப்புப்  புலனாய்வுக் குழு லக்கிம்பூர் கேரி சம்பவம் திட்டமிட்ட சதி எனக் கூறி உள்ளது.  ஆயினும் பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை.  இந்த சம்பவத்துக்குக் காரணமான அஜய் மிஸ்ராவை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை” என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

[youtube-feed feed=1]