ஆம்ஸ்டர்டாம்: ஹாலந்து நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் பிரதமர் மார்க் ருட்டே இந்த ஆச்சர்ய முடிவை மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் ஐரோப்பாவை ஆட்டிப் படைத்துவரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக, இந்த நடவடிக்கைக்கு காரணம் கொரோனா வைரஸ்.
அதேசமயம், இந்த நியமனம் தற்காலிக அடிப்படையிலானது. மார்ட்டின் வான் ரிஜின் என்ற பெயருடைய தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அந்த முன்னாள் சுகாதார அமைச்சர், 3 மாதங்களுக்கான சுகாதார அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“அவர் ஏற்கனவே சுகாதார அமைச்சராக இருந்துள்ளதால், அவரின் துறைசார்ந்த அறிவைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் ஹாலாந்து பிரதமர்.
அந்நாட்டின் சுகாதார அமைச்சராக இருந்த ப்ருனோ ப்ரூஸ் ராஜினாமா செய்ததையடுத்து, மார்ட்டின் வான் ரிஜின் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.