ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 112 இடங்களில் முன்னிலையிலும் பாஜக கூட்டணி 73 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.   சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் நடந்துள்ளது.  மொத்தம் உள்ள 20 மாவட்டங்களில் தலா 14 இடங்கள் என 280 இடங்களுக்கான தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் இணைந்து ஃபரூக் அப்துல்லாவின் தலைமையில் போட்டியிட்டன.  இந்த கூட்டணிக்கு குப்கர் தீர்மான மக்கள் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த கூட்டணிக்கு எதிராக மத்திய ஆளும் கட்சியான பாஜக போட்டியிட்டுள்ளது.  இந்த தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த முடிவுகளின்ப்டி கூட்ட்ணி 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது  மேலும் 12 இடங்களில் முன்னணியில் உள்ளது.  பாஜக இதுவரை 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இதைத் தவிர எந்தக் கட்சி ஆதரவும் இல்லாத சுயேச்சைகள் 57 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.  அத்துடன் 6 சுயேச்சைகள் முன்னணியில் உல்ளனர்.  மேலும் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று 5 இடங்களில் முன்னணியில் உள்ளது.