சென்னை: சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், ‘ ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, – ஒரே இரவில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதால், சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது. இதை தடுக்க புதிதாக ஆட்சி அமைத்துள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சென்ன மாநகர காவல் ஆணையர் உள்பட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் ஆங்காங்கே கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
சமீபத்தில் (மே 17ஆம் தேதி) சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் சீனிவாசன், பரத் என்கின்ற இரண்டு கானா பாடல் கலைஞர்கள், ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேரை மணிமங்கலம் தனிப்படை காவல்துறையினர் மே 19 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவயதில் இருந்து ஏற்பட்ட முன்விரோதம், ஏரியாவில் யார் கெத்து, கஞ்சா விற்பனையில் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இந்த இரட்டை கொலை நடைபெற்று தெரியவந்தது.‘
மேலும், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, இதே போல் முன்விரோதம் காரணமாக, பல்லாவரம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டனர். அடுத்தடுத்து, சென்னை புறநகர் பகுதியில் நடந்த 2 இரட்டை கொலை சம்பவங்கள் தலைநகரில் பதற்றத்தையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் எதிரொலியாக, சென்னை மாநகர எல்லையில் இருக்கும் ரவுடிகள் மோதல், போதை பொருள் விற்பனை மற்றும் தடுத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக, ரவுடிகளை ரவுண்டுகட்ட காவல்துறை முடிவு செய்து, அதற்காக ‘ஆப்ரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ செயல்படுத்தப்பட்டு, இதன் லம் நேற்றிரவு முழுவதும் ரவுடிகளை கண்காணித்து காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில், நேற்று ஒரே இரவில் சென்னை காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 75-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில்,
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 20 ரவுடிகளும்
தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் 18 ரவுடிகளும்
மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரவுடிகளும்
அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரவுடிகளும்
அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் 10 ரவுடிகளும்
என சென்னை முழுவதும் சுமார் 76 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இவர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் எனவும், போதை பொருள் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ‘ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்’ தொடரும் எனவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]