சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் முதல் மீண்டும் ‘மினி பஸ்’ இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கிராமங்களுக்கும் பேருந்து சேவையை உறுதி செய்யும் வகையில் டிசம்பர் முதல் ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து சேவை தொடங்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டியது அவசியம். நகர பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும்வகையில், கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கிராமப்புற பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அது வெற்றிகரமாக செயல்படாத நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ம ஜெயலலிதா ஆட்சியின்போது கிராம் நகரம் என பல இடங்களில் மினி பஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
2013ம் ஆண்டு அக்டோபர் 22ந்தேதி அன்று சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், முதல் கட்டமாக சென்னையில், 50 மினி பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து, மினி பஸ் சேவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. சென்னையின் உள்பகுதி உள்பட பல கிராமங்களிலும் மினி பஸ் இயக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் எடப்பாடி ஆட்சியின்போது இந்த திட்டம் வெகுவாக குறைக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியின்போது சுமார் 90 சதவிகிதம் வரை மினி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த மினி பேருந்து இயக்கும் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முன்வந்jது. முதலமைச்சர் ஸ்டாலின், அந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்க செய்து, வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, மின் பேருந்து இயக்கம் மீண்டும் செயல்பாட்டு வர உள்ளது.
வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் மீண்டும் மினி பேருந்து இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். . சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளனர். அதாவது, இந்த சிறிய பேருந்துகள் இயக்கமானது, ஒரு கிராமத்தில் குறைந்தது நூறு குடும்பங்கள் இருந்து, இதுவரை அரசுப் பேருந்தோ, தனியார் பேருந்தோ இயக்கப்படாத பகுதிகளில், சிறிய பேருந்துகள் வந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய பேருந்துகள் இயக்கப்படவிருக்கும் கிராமங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறு நகரங்களின் வழியாக இயக்கப்படவிருக்கும் வழித்தடத்தை போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மண்டல போக்குவரத்து அதிகாரிகளும் உருவாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரையுடமும் கருத்துகளும் கேட்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு புதிய சிறிய பேருந்தும் 70 சதவீதம் பேருந்து வசதியற்ற பகுதிகளிலும், 30 சதவீதம் பேருந்து வசதியிருக்கும் பகுதியையும் இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது.
சிறிய பேருந்துகள் 25 கிலோ மீட்டருக்குள் இயக்குவதற்கும், அதில் 17 கிலோ மீட்டர் பகுதி பேருந்து வசதியற்ற, 8 கிலோ மீட்டர் வசதி ஏற்கனவே பேருந்து வசதி இருக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மினி பேருந்து இயக்கப்படும் பாதையிலேயே அதிகபட்சம் 4 கிலோ மீட்டர் வரை இயக்கவும் அனுமதிக்கப்படுகிறது. மினி பேருந்து அதிகபட்சமாக 25 கிலோ மீட்டரும், குறைந்தபட்சமாக 10 கிலோ மீட்டர் அல்லது 15 கி.மீ. வரையிலும் தேவையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. விரைவில், விளக்கமாக விதிமுறைகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய திட்டம் இந்த வருட இறுதியில் செயல்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களின் வரவேற்பை பெற்ற ‘மினி பஸ்’ஐ மீண்டும் இயக்க திமுக அரசு முடிவு…
தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்: வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!