சென்னை:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வரும் டிசம்பர் 5ந்தேதி, அவரது நினைவி நாளில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கட்டிட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றும் 2மாதத்தில் பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பீனிக்ஸ் பறவை மாதிரி வடிவத்தில் நினை வாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்கும்போதே கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினாக் கடற்கரை யில் எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான 90 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஒரு அறிவு பூங்கா, ஒரு அருங்காட்சியகம், ஒரு நூலகம், ஒரு பெவிலியன், ஒரு புல்வெளி, ஒரு சேவை பகுதி போன்றவைகளுடன் ஜெயலிதாவின் நினைவிடம் அமையப்பெற்று வருகிறது. ‘மண்டபத்துக்கான தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. மேலும் நினைவிடத்தை சுற்றிலும் அழகிய மலர்களால் ஆன கார்டனும் அமைக்கப்பட்டு வருகிறது.
50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஆகஸ்டு 5ந்தேதிக்குள் முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ல் நினைவிடத்தை திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரி, ஜெ. நினைவிடம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.