சென்னை:
நாடு முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்களில் கேட்டரிங், ஏசி இல்லாத ஓய்வு அறைகள் திறக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்ட ரயில்வே சேவை, சுமார் 2 மாதங்களுக்குப் பிறக தற்போது தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. நாடு முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். அதற்கான டிக்கெட் முன்பதிவு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, கவுண்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் (மே 22ந்தேமி) ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் மூலம் டிக்கெட் விற்பனையை நேரடியாக செய்து வருகிறது.
இந்த நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் மற்றும் ஏசி அல்லாத ஒய்வு அறைகள், உணவு பிளாசா, புத்துணர்ச்சி அறைகள் போன்றவை இருந்தால் அவற்றை திறந்து பயணிகள் பயன்பாடடுக்கு வழங்கலாம் என அறிவித்து உள்ளது.