கைகுலுக்கிய மோடி… ஊருக்கு தான் உபதேசமா பிரதமரே…. வீடியோ

Must read

ந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் மோடியும் பல முறை நாட்டு மக்களுக்கு ஊடகங்களின் வாயிலாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதன்படி,

கொரோனா வைரஸ் குறித்து வரும் தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்.  அதிலிருந்து ஒதுங்கியே இருங்கள். எந்த சந்தேகம் இருந்தாலும் மருத்துவர்களிடம் கேட்டுத் தெளிவடையுங்கள் என வேண்டுகோள் விடுத்ததுடன்,
மக்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துச் சொல்வதைத் தவிர்த்து, இருகரம் கூப்பி வணக்கம் (நமஸ்தே) சொல்லுங்கள், சமூக விலகலை கடைபிடியுங்கள்  என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், நேற்று ஒடிசாவில் அம்பான் புயல் சேதத்தை பார்வையிடச் சென்ற பிரதமர் மோடி,  அங்கு மாநில முதல்வரான நிதிஷ்குமாரின் கையை பிடித்து கைக்குலுக்கியதுடன் சமூக விலகளையும் கடைபிடிக்காமல் பின்னர் நமஸ்தே கூறிச் சென்றார்.
இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, இந்தியாவின் பாரம்பரிய நடைமுறையான   நமஸ்தே உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
சம்பிரதாயப்படி ஒருவருக்கொருவர் கை குலுக்குவதையும், கட்டித்தழுவுவதையும் தவிர்த்து வருகின்றனர்.

ஆனால், நமது  நாட்டின் பிரதமரோ,  சமூக விலகலை கடைபிடிக்காமல், தமது உத்தரவு மற்றும் அரசின் உத்தரவை மதிக்காமல், முதல்வருடன் கைக்குலுக்கியது, அரசின் உத்தரவை மதிக்காமல் நடந்துகொண்டது   கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
பிரதமரின் அறிவிப்புகள் அனைத்தும் ஊருக்குதான் உபதேசமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
மோடி அரசு அறிவித்துள்ள 20ஆயிரம் கோடி பொருளாதார நடவடிக்கையும் இதுபோலத்தானோ என்று நக்கலடித்து வருகின்றனர்.


Video thanks: NG news
 

More articles

Latest article