ஊட்டி
வரும் 16 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் மலைப்பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டது. தற்போது கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் மலை ரயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது.
இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை வருகிற 16-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கோவை, நீலகிரியில் மழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.