உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு மக்கள் கடும் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். பல இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே செல்லும் மலை ரெயில் பாதையில் மழை காரணாமாக கடுமையான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையொட்டிஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையில் ஆன பாதையில் உதகமண்டலம் சென்ற மலை ரெயில் பாதியில் திரும்பி உள்ளது. தற்போது தென்னக ரெயில்வே இந்த சேவையை ரத்து செய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel