ஊட்டி
3 நாட்களுக்கு ஊட்டிமலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்ஹ்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது.
இதில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் , கனமழை காரணமாக ஊட்டி மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .
எனவே சீரமைப்பு பணி காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் மற்றும் உதகை – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை நாளை (15.12.2024)முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel