சென்னை: பள்ளி மாணாவர்கள் மற்றும் ஆசிரியர் இதழ் வெளியீட்டுக்காக 7 கோடியே 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் சார்பாக ஊஞ்சல் இதழும்,  தேன்சிட்டு இதழும் வெளிவர இருக்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல்  தொடர்பாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதுபோல  உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்க கனவு ஆசிரியர் இதழ் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில் ஒரு ஆண்டுக்கு 20 மாணவர் இதழ்களும் 10 ஆசிரியர் இதழ்களும் அச்சிடப்பட்டு பள்ளிக்குச் சென்று வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 7 கோடியே 15 கோடி ரூபாய் நிதியை அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.