கியாந்த் புயல் மிகுந்த வலிமையானதுதான் ஆனால் இதைவிட வலிமை வாய்ந்த புயலைக்கூட உலர்காற்று சில மணி நேரங்களில் பலவீனப்படுத்திவிடும். எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை புயல் அபாயம் இல்லை. இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்க்கலாம் .

kyanth

பலவீனமடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும். இதுவே தமிழகத்துக்கு வடகிழகு பருவமழையை கொண்டுவரும். வரும் 29-ஆம் தேதி இரவிலிருந்து மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் 30-ஆம் தேதி மழைபெய்யக்கூடும். இந்த வடகிழக்கு பருவமழை சீசனில் பல காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.