கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க தேவையான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுத்துவருகிறது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 13 ம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்கோயிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.