சென்னை: சேலத்தில் நாளை நடைபெறும்   தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது.

தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு அடையாள அட்டையில்லாமல் யாரும் வரவேண்டாம். அடுத்த மாதம் கண்டிப்பாக மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறும்” – தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் சேலம் பிரசாரக் கூட்டத்திற்கு, மாநகரக் காவல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகிலுள்ள தாளமுத்து நடராஜன் திடலில்  நாளை (பிப்ரவரி 13-ஆம் தேதி) மக்கள்சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 5,000 பேர்கள் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

மேலும்,  நாளை பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கருதி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது,  மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட வேண்டும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே என பல்வேறு கெடுபிடிக்ளை அறிவித்து உள்ளது.

ஏற்கனவே மூன்று முறை, விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியும், இறுதியில் அனுமதி வழங்ககப்பட்டுஉள்ளது. அதுவும் கொளுத்தும் வெளியிலில் 3மணி நேரம்மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, மக்களிடையே திமுக ஆட்சியின் மீதுகடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் தவெக தொண்டர்கள் விஜய் காண ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை சேலத்தில் நடைபெறும்  விஜய் பிரசார கூட்டத்துக்கு நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி என  அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக  வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ”மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

க்யூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம்.

இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]