பாட்னா :

க்களுக்கு சேவை ஆற்ற நினைக்கும் சமூக சேவகர்கள், அரசியல் கட்சி எதிலும் சேராமல் சுயேச்சையாக தேர்தலில் நிற்பது உண்டு. அவர்களில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள்.

பீகார் மாநிலத்தில் ஒரு காலத்தில் ஏகப்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள், தேர்தலில் தனித்து நின்று சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளனர்.

1967 ஆம் ஆண்டு பீகாரில் சுயேச்சை வேட்பாளர்கள் 33 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிறகு சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் 1990 ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றார். அப்போது பீகார் சட்டசபையில் 30 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

கடந்த தேர்தலில் 4 பேர் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றனர். இந்த முறை பீகார் மாநிலத்தில் ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர், மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அவர் பெயர், சுமீத் குமார் சிங்.

ஜாமுய் மாவட்டம் சகாய் தொகுதியில் போட்டியிட்ட சுமீத் குமார் சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.ஜே.டி. வேட்பாளர் சாவித்ரி தேவியை 581 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

– பா. பாரதி