திரைப்பட விமர்சகரும் யூ-டியூபருமான ‘ப்ளூ சட்டை’ மாறன் ‘ஆன்டி இந்தியன்’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி வருகிறார்.
இரண்டாண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, “இந்த படத்தில் நான் முதலமைச்சராக நடித்துள்ளேன், இத்திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த போது தமிழகத்தில் வேறு ஒருவர் முதலமைச்சராக இருந்தார்”

“இப்போது முதலமைச்சராக இருப்பவர் யாரென்று அனைவருக்கும் தெரியும், திரைப்படம் வெளியானதும் எனது கேரக்டர் சர்ச்சையாக வாய்ப்பிருக்கிறது”
“சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்றே சிலர் காத்திருக்கவும் செய்கிறார்கள், உண்மைக் கதைக்குக் கூட பொய் பெயர்களை வைத்தால் தான் படம் ஓடுகிறது” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]