சியோல்
தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது.
பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி குழந்தைக்கு 3 வாரங்கள் தாய்ப்பால் மட்டுமே தரப்பட்டது. வேறு சிகிச்சை எதுவும் தரப்படவில்லை.
20 நாள்கள் கழித்து குழந்தையை பரிசோதித்த பின் கொரோனாத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய மருத்துவர்கள் கூறுகையில், “பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் பிறந்த குழந்தைகள் தனித்தன்மை வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பர்.
எனவே இந்த முறை மற்றவர்களுக்குப் பொருந்தாது” என்றனர்.