நிகோடின் செல் ரிஷப்டார்களுடன் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாரிஸின் சிறந்த மருத்துவமனைகளில் 343 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளையும், 139 லேசான அறிகுறி கொண்டவர்களையும் ஆராய்ந்த  பின்னர் இந்த முடிவுகளை உலகிற்கு அறிவித்துள்ளனர்.

பாரிஸ், பிரான்ஸ்

பிரான்சில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியின் படி, நிக்கோடின் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என அறியப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகோடினை வைத்து தடுப்பு மருந்து தயாரிப்பதா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க உபயோகப்படுத்துவதா என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆய்வாளர்கள், 343 கொரோனா வைரஸ் நோயாளிகளையும், 139 பேருடன் லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களையும் வைத்து சோதித்து இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்ட நோயாளிகளில் 5% பேர் மட்டுமே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பது இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது” ஆய்வின் இணை ஆசிரியரும் உள்மருத்துவ பேராசிரியருமான ஜாஹிர் அமௌரா கூறினார். பிரான்சின் பொது மக்களில் சுமார் 35 சதவிகிதம் புகைபிடிக்கும் பழக்கம் கொனடவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இதேபோன்ற கண்டுபிடிப்பு, பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு சாதமானதாக இருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகளின்படி, இது சீனாவில் பாதிக்கப்பட்ட 1,000 பேரில் 12.6 சதவீதம் பேர் புகைப்பிடிப்பவர்கள் என்று பரிந்துரைத்தது. ஆனால், உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரக் கணக்குகள் “ சீன மக்கள் தொகையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை அதன் மொத்த மக்கள் தொகையில் சுமார் 26% ஆகும். ஆனால், கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் சதவிகிதம் மிக மிகக் குறைவு ஆகும். இது சீனாவிம் ஆய்வுகள், பிரான்ஸின் ஆய்வுகள் என இரண்டுக்கும் சாதகமானதாகவே அமைந்துள்ளது.  எனவே, இந்த ஆய்வு முடிவுகள் மற்றும் கள நிலவரம் கூறுவது என்னவெனில், “ஒரு கொரோனா வைரஸ் மனித செல்களில் தொற்றிக் கொள்ள உதவும் செல் மேற்பரப்பு புரோட்டீன்களில் (ரிஷப்டார்) நிகோடின் இணைந்து, வைரஸ் தொற்றை தடுக்கிறது என்பதாகும். இன்னும் எளிதாக சொல்வதானால், நிகோடின் வைரஸ் தொற்றை தடுக்கிறது” என்று பிரான்சின் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டின் புகழ்பெற்ற நரம்பியலாளர் ஜீன்-பியர் சேஞ்சக்ஸ் கூறுகிறார்.

மேலும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் பிரான்சின் சுகாதார அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். பாரிஸில் உள்ள பிட்டி-சல்பெட்ரியர் மருத்துவமனையில் சுகாதார ஊழியர்கள் மீது நிகோடின் பட்டைகளை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் தான் ஆரம்பகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு ஆரம்ப ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நிகோடின் பட்டைகள் மருத்துவப் பணியாளர்களை கொரோனா தொடரில் இருந்து பாதுகாக்கிறதா என்பதை தொடர் கண்காணிப்பின் மூலம் உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி, அவர்களின் அறிகுறிகள் மற்றும் நோய் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறதா என ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது,” என அமோரா கூறினார். ஒரு கிருமித் தொற்று அல்லது நமது உடலை சேராத ஏதேனும் ஒன்று நமது உடலுக்குள் செல்லும் போது, அந்த பொருளைப் பொறுத்து அதற்க்கு சாதகமாக அல்லது எதிர்த்து  நோயெதிர்ப்பு செல்கள் சைட்டோகைன் எனப்படும் ஒரு கரிம வேதிபொருளை உற்பத்தி செய்வதன் மூலம் நமது உடலின் எதிர்ப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும். இவ்வாறான சைட்டோகைன் உற்பத்தியை தூண்டவல்ல வேதி அல்லது கரிம வேதிப் பொருட்கள் நமத நோஎர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் அல்லது குறைவாக்கலாம். எனவே ஆராய்ச்சியாளர்கள் நிகோடினுக்கு இவ்வாறான பண்பு ஏதும் உள்ளதா? இதை வைத்து கொரோனாவிர்க்கு சிகிச்சையளிக்க இயலுமா என ஆய்வு செய்ய விளைந்துள்ளனர். ஆனால் இது குறித்து மேலும் பலகட்ட ஆய்வுகள் நடைபெரவேண்டியுள்ளதால், மக்களை புகைப்பிடிக்க ஊக்குவிக்கவில்லை. அதேசமயம் நிகோடின் பட்டைகளைப் பயன்படுத்தவுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, “நிகோடினின் ஒரு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் என்பதையும், அதன் கடுமையான விளைவுகளையும் நாம் மறந்துவிடக் கூடாது” என்று பிரான்சின் உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் கூறினார். “புகைபிடிக்காதவர்கள் முற்றிலும் நிகோடின் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது எதிர்விளைவுகளையும், பயன்படுத்துபவர்களை  அப்பளக்கத்திர்க்கு அடிமையாக்கும்,” என்று அவர் எச்சரித்தார். பிரான்சில் ஆண்டுக்கு 75000 பேர் புகையிலை சார்ந்த பிரச்சனைகளால்  இறக்கின்றனர். மேலும் புகையிலை பயன்பாடு மற்றும் மரணங்களில் உலகில் முதல் இடத்தில் உள்ளனர். அதே சமயம், வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் குறைக்க நிகோடின் உதவக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், நாட்டின் சுகாதார அமைச்சகம் நிகோடின் தயாரிப்பு மற்றும் பதுக்குதலை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்த உபயோகப்படுத்தும் செயற்கை நிகோடின் சிகரட்டுகள் மற்றும் நிகோடின் பட்டைகளின்  ஆன்லைன் விற்பனையையும் தடை செய்து பிரெஞ்சு அரசாங்கம் கடந்த 24, ஏப்ரல் வெள்ளிக்கிழமை ஒரு ஆணையை வெளியிட்டது. மேலும் மருந்தகங்களின் நேரடி விற்பனையைக் கட்டுப்படுத்தி, ஒரு நோயாளிக்கு அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு தேவையான அளவு மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக நாம் கூறவிரும்புவது என்னவெனில், இது போன்ற ஆராய்சிகள் என்பது ஆண்டுக் கணக்கில் நீளும் வாய்ப்புகள் அதிகம். எனவ தற்போதைய உடனடி தேவைக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, நமக்கு நாமே சுயமாக காத்துக் கொள்வதே ஆகும்.

தமிழில்: லயா