புதுடெல்லி:
பிரதமரின் நகர்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 20 சதவீத வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், 30 சதவீத வீடுகள் கட்டுமான பணி இன்னும் தொடங்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அனைவருக்கும் வீடு என்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் என அறிவிக்கப்பட்டது.
2022-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக புள்ளிவிவரம் ஒன்றை மத்திய அரசு அறிவித்தது.
2019-ம் ஆண்டுக்குள் லட்சத்து 70 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பத்து லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
அதாவது நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலிருந்து 30 சதவீத வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2014-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 14 சதவீத வீடுகளை மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கட்டித்தர முடிந்துள்ளது. ஒரு கோடி வீடுகள் கட்டுவது என்பது இந்த திட்டத்தின் இலக்காகும்.