புதுடெல்லி: இந்த 4 ஆண்டுகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளில் ஒட்டுமொத்தமாக 13.9% அளவிற்கான வேலைவாய்ப்புகளே அதிகரித்துள்ளன என்று சி.ஐ.ஐ சர்வேயில் தெரியவந்துள்ளது.
கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என 2014 தேர்தல் பிரச்சாரத்தில் மார்தட்டிய மோடியால், கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 3,32,394 வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்க முடிந்துள்ளது என்பது சர்வே மூலமாக அம்பலமாகியுள்ளது.
இந்த சர்வே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையில், மராட்டியம், குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 50% க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் சேர்ந்துள்ளன.
மைக்ரோ செக்டார் எனப்படும் குறுந்தொழில் துறையில்தான், அதிகபட்சமாக 73% பணிவாய்ப்புகள் பெருகியுள்ளன. சிறுதொழில் துறையில் 23% பணிவாய்ப்புகளும், நடுத்தர தொழில்துறையில் 4% பணிவாய்ப்புகளும் பெருகியுள்ளன.
மொத்தமாக, 70,941 நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்ட பணிவாய்ப்புகளுக்கு சான்று பகர்கின்றன.
– மதுரை மாயாண்டி