துரை

ணையம் மூலம் நடந்த அவனியாபுரம், பாலமோடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

வரும் ஜனவரி 14,15, 16 தேதிகளில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.  அலங்காநல்லூரில் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் ஊர்மக்கள், குழுவினரிடம் ஆலோசனை நடத்திய பிறகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் 16ஆம் தேதிக்குப் பதிலாக 17ஆம் தேதி திங்கட்கிழமை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நேரடியாக டோக்கன் வழங்காமல் இந்த முறை இணையத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.  நேற்று மாலை 5:30 மணிக்குத் தொடங்கிய இணையதள முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும்போது குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்ற நபர்களை வீட்டின் மாடியில் அனுமதிக்கக் கூடாது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.  மேலும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமங்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.