சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியாவின் ஆனந்த், ஹரிகா, ஹம்பி உள்ளிட்ட 6 செஸ் நட்சத்திரங்கள், ஆன்லைன் செஸ் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைளுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும் நிதியுதவி அளித்துவரும் நிலையில், செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளும் களத்தில் குதித்துள்ளனர்.

அவர்கள் நிதித்திரட்டும் வகையில், ஆன்லைன் கண்காட்சி செஸ் போட்டியில் ஆடவுள்ளனர். ஆனந்த், ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ், ஹரிகா, பாஸ்கரன் மற்றும் ஹம்பி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

இதன்மூலம் திரட்டப்படும் நிதியானது பிரதமரின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிதிக்கு வழங்கப்படவுள்ளது. தங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அந்த நட்சத்திரங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.