ப்ரசிலியா :

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மாற்றத்தை உண்டாக்கி 1978 முதல் 2017 வரை அதன் செயல் தலைவராக இருந்து சிறப்பாக செயலாற்றியவர் பெர்னி எகில்ஸ்டோன்.

எகில்ஸ்டோன் கார் பந்தயம் நடத்துவதில் மட்டுமல்ல பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

ஆமாம்பா ஆமாம்…. தற்போது 89 வயதாகும் எகில்ஸ்டோன் கடந்த 2012 ம் ஆண்டு பாபினா பிளாசி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார், அவருக்கு இப்போ வயசு 44, இவர் வயசில் பாதி வயசு தான், இவர் இப்போ நிறைமாத கர்பிணியா இருக்கார் வரும் ஜூலை மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப்போவதா சொல்லி இருக்கார் எகில்ஸ்டோன்.

எகில்ஸ்டோன் கார் பந்தயம் நடத்துவதில் தீவிரமாக சுற்றி வந்த நேரத்திலேயே  ஐவி பம்போர்ட் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் டெபோரா என்ற பெண் முதலாவதா பிறந்தார், இவரது முதல் பெண்ணுக்கு இப்ப வயசு 65.

இரண்டாவதா, திருமணம் செய்துகொண்ட ஸ்லாவிக்கா ராடிக் என்பவர் மூலம் தமரா (35) மற்றும் பெட்ரா (31) என்று இரண்டு பெண்கள் உள்ளனர்.

இதுல அதிசயம் ஏதும் இருக்கானு தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட ஒரு சிலர் அவர் கிட்ட கேட்ட போது, இதுல என்ன இருக்கு ஆச்சர்யப்பட எனக்கு 89 வயசானாலும் நான் எப்போதும் 29 மாதிரி தான் பீல் பன்றேன் அப்படின்னு…. சாதாரணமப்பாங்கற மாதிரி … சொல்றார் மனுஷன்.

உங்க மத்த பொண்ணுங்க எல்லாம் இதை பத்தி என்ன நினைக்கறாங்கனு கேட்டதுக்கு, இதைப்பத்தி நெனைக்க என்ன இருக்கு, அவங்க எல்லாம் பாட்டியாகப்போற வயசுல குடும்பத்துல புது வரவா தம்பி வரத பத்தி சந்தோசமா இருக்காங்கனு சொல்றார்.

இவருக்கு வரும் அக்டோபர் மாதம் 90 வயதாக போகுதாம் அதுனால ரெட்டிப்பு சந்தோஷத்துல துள்ளிக்குதிக்கிறார் எகில்ஸ்டோன்.