Skip to content
  • Tue. Sep 22nd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஜூலை 6 வரை அவகாசம்! சென்னை உயர்நீதி மன்றம்

Jun 25, 2020

சென்னை:

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக மத்தியஅரசுக்கு  ஜூலை 6 வரை அவகாசம் அளித்து  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், பல பல தனியார் கல்வி  நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்வி போதித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில்,  ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க வேண்டும்,   6 முதல் 12ம் வகுப்பு வரை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது,  ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, மாணவர்க ளுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டது.

Post navigation

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா…
மதுரையில் தீவிரமடைந்துள்ள கொரோனா: 16 மணி நேரத்தில் 10 பேர் பலி, 25 பேர் பாதிப்பு…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer