சென்னை,

பிளஸ்-2 மாணவர்கள் படித்துவரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பாக பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது.

இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. வலைதளத்தின் செயல்பாட்டை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

http://tnschools.chennaitouch.com/

என்ற பள்ளிக்கல்வித்துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின்  மூலம்  ‘நீட்’ போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ள விரும்பும் மாணவர்கள், பயிற்சி திட்டத்திற்காக இந்த புதிய  இணையதளத்தில், ‘ஆன்லைன்’ பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு நேற்று முதல் தொடங்கி உள்ளது. வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம்

இது குறித்து அமைச்சர், செங்கோட்டையன் கூறும்போது,  ”மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாக மட்டுமே  பயிற்சியில் சேர வேண்டும். இவ்வாறு முன்பதி செய்பவர்களுக்கு பிற மாநில நிபுணர்கள் மூலம் பயிற்சி மேற்கொள்ளப்படும்.

மேலும், தமிழகத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள்  பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பார்கள் என்றார்.

பள்ளிக் கல்வியின் இந்த புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.