சென்னை: நர்சிங், பி.பார்ம் உள்பட துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் (B.Sc. Nursing), பி.பார்ம் (B.Pharm) பிஎஸ்சி ரேடியோ கிராபி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கானா விண்ணப்ப பதிவும் இன்று தொடங்கிகறத.
www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 15ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின்னர், அதை நகல் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் வரும் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வுக் குழு செயலாளருக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.