சென்னை:

நாடு முழுவதும் வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் கிலோ 33 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்- செல்லூர் ராஜூ  தெரிவித்து உள்ளார்.

தற்போது பெரிய வெங்காயத்தின் வலை கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறத. சமையலில் வெங்காயத்தின் பங்கு முக்கியமானது என்பதால், அதன் விலை உயர்வு பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இதன் காரணமாக உணவகங்களில் உணவு பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  அதன்படி, தமிழகத்தில் உள்ள  கூட்டுறவு கடைகளில் ‘பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாக வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரையிலும், சென்னையில் ஒரு கிலோ 70 முதல் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.