டெல்லி:

நாடு முழுவதும் வெங்காய விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக எம்பி. கனிமொழி இன்று ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுவதும் வெங்காய விலை இல்லத்தரசிகள் கண்ணில் கண்ணீரை வரவைழத்து வருகிறது. நாளுக்கு உயர்ந்து வரும் வெங்காயம் விலை தற்போது கிலோ ரூ.100ஐ தாண்டி உள்ளது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாட்டிலிருந்து 1.2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய இருப்பதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து,  திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி வெங்காய விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.