சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடிய மருந்து என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நோயைக் குணப்படுத்த அதை விடக் கொடிய மருந்து தருவதற்கு சமம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கட்டுரை ஆங்கில பத்திரிகையில் வெளியாகி உள்ள நிலையில், அதை இணைத்து தனது சமூக வலைதளத்தில் , ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடிய மருந்து என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், மத்தியஅரசு கூறி வரும், ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை சிதைத்து அதன் அடிப்படை கட்டமைப்பையே மீறுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் சட்டப்பேரவை மீதான நம்பிக்கை சீர்குலைந்துவிடும்.
சட்டப்பேரவை மீதான நம்பிக்கை சீர்குலைவதால் மாநிலத்தில் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே முனை மழுங்கிப் போய்விடும்; நாடாளுமன்ற ஜனநாயகத்தையே தலைகீழாக திருப்பக்கூடியது.
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவை அதிபர் ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும் திட்டம் என்று கடுமையாக சாடி உள்ளார்.
[youtube-feed feed=1]