அரியலூர்: அரியலூர் நகர் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வரும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் களப்பணியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆகையால் ஆட்சியர் அலுவலகத்தை 3 நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள், நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு அரியலூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel