டெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லி நிதி ஆயோக் அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இதுவரை 3,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 877 பேர் குணமாகி உள்ள நிலையில், 54 பேர்பலியாகி உள்ளனர். டெல்லியில் 99 சிவப்பு மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், அங்குள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது…
இதையடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் 2 நாள் மூடப்பட்டு, முழுமையான கிருமி நீக்கம் மற்றும் சுத்திகரிப்பு நடைமுறைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக நிதி ஆயோக் துணை செயலாளர் (நிர்வாகம்) அஜித் குமார் தெரிவித்துள்ளார்.‘‘