லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் டாப் 5 பேட்ஸ்மென்களில் ஒருவர், அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்க வேண்டுமென கூறியுள்ளார் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கான 352 ரன்களை எதிர்கொண்டு பேட்டிங் செய்வதற்கான அவகாசம் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் கிடைக்கவில்லை.

குறிப்பாக, நடுகளத்தில் ஆடியவர்களுக்கு களத்தில் செட்டிலாவதற்கு சுத்தமாக அவகாசமே கிடைக்கவில்லை.
அவர்களால் சில பந்துகளை நெருக்கடியின்றி சந்திக்க முடிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எனவே, அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் அணிக்கு வெற்றி தேடி தந்திருக்க வேண்டும்” என்றார்.

பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் ஆகியோர் மெதுவான ஆட்டத்தையே ஆடினர். இதனால், பின்னால் களமிறங்கிய வீரர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.