சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   இதில் தமிழகமும் ஒன்றாகும்   கொரோனாவை கட்டுப்படுத்த மே 10 முதல் 24 வரை 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்து தொழில்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  அப்போது மு க ஸ்டாலின், “வரும் மே மாதம் 24 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கும் சூழல் வராது என நம்புகிறேன்.  அப்படி ஒரு நிலை வந்தால் தொழில்துறை, வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து அமல் படுத்தப்படும்” என அறிவித்தார்.

இந்த செய்தி பல ஊடகங்களில் ”தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது: என முதல்வர் அறிவித்ததாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.  வேறு சில செய்தி ஊடகங்களில் ”மீண்டும் முழு ஊரடங்கு நிலை ஏற்படாது_முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி” எனச் செய்திகள் வெளியிட்டுள்ளன.  ஒரே செய்தி இவ்வாறு பல பரிணாமங்களில் வெளியானது மக்களிடையே கடும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.