பிரியங்கா ரெட்டியை தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட மற்றொரு பெண்: மக்கள் அச்சம்

Must read

பிரியங்கா ரெட்டியை தொடர்ந்து சம்சதாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத்தில் 26 வயது நிரம்பிய ப்ரியங்கா ரெட்டி என்கிற கால்நடை மறுத்துவர் இரு தினங்களுக்கு முன்பு லாரி ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் 4 பேரை தெலங்கானா காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், தற்போது அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா ரெட்டியை போலவே பாலியல் வன்கொடுமை, உடல் எரிக்கப்பட்ட நிலையில் அப்பெண் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த அப்பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அவர்கள் அனுப்பி வைத்தனர்.

பிரியங்கா ரெட்டியை போலவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரை போலவே எரித்து கொல்லப்பட்டிருக்கும் இப்பெண்ணுக்கு வயது 35 இருக்கும் என்றும், பிரியங்காவை கொன்றவர்களே இப்பெண்ணை கொன்றார்களா ? இல்லை, வேறு ஏதேனும் சிலர் சேர்ந்து இக்கொலையை செய்தார்களா ? என்று விசாரிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே, மற்றொரு பெண்ணின் உடல் அதே பகுதியில், எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article