டில்லி,
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை டிடிவி தினகரன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இரட்டை இலையை பெற ரூ.50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப் பட்டுள்ள டிடிவி தினகரன் மீது பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து டிடிவி தினகரனை டில்லி போலீஸ் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஹவாலா ஏஜன்ட் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பணம் பரிமாற்றம் தொடர்பாக டிடிவி தினகரன்மீது அமலாக்கத்துறை புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.
ஹவாலா ஏஜென்ட், புரோக்கர் நரேஷ் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கதுறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து உடடினயாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.