நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 8 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்! நாடாளுமன்றத்தில் தகவல்

Must read

சென்னை:

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 8 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று நாடாளு மன்றத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் 15% உள்ள மாநிலம் மகாராஷ்டிரா என்றும், 12 சதவிகிதத் துடன் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்ஷ் வர்தன், இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) படி, மார்ச் 31 வரை 11.59 லட்சம் அலோபதி மருத்துவர்கள்   எம்.சி.ஐ யில்  பதிவு செய்துள்ளனர் என்று கூறினார்.

உலக சுகாதாரத்தறை கணக்கெடுப்பின்படி, 1.35 பில்லியன் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி 1: 1456 என்ற மருத்துவர் என்ற மக்கள் தொகை விகிதத்தை குறிக்கும். அதாவது 1456 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலேயே நாட்டில் மருத்துவர்கள் இருப்பதாகவும், உலக சுகாதார ஆய்வகத்தின் விதிகளின்படி, 1100 பேருக்கு ஒரு மருத்துவர் என் ற விகிதத்தை விட குறைவு என்று தெரிவித்தார்.

இதன் காரணமாகவே மத்திய, எம்.பி.பி.எஸ் படிப்பில்,  அதிகபட்ச மாணவர்கள் சேர்க்கையாக இந்த ஆண்டு   250 இடங்களாக உயர்த்தியது, என்றும்,  நிலம், ஆசிரிய, ஊழியர்கள், படுக்கை வலிமை மற்றும் பிற உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தியது என்றும், மத்திய அமைச்சர் கூறினார்.

மகாராஷ்டிராவில் 1.7 லட்சம் மருத்துவர்களுடன் ஒப்பிடும்போது, ​​தமிழகத்தில் 1.3 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் 1.2 லட்சம் மற்றும் ஆந்திராவில் சுமார் ஒரு லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். 77,549 மருத்துவர்களுடன் உத்தரபிரதேசம் அதிகபட்ச மருத்துவர்களைக் கொண்ட முதல் 5 மாநிலங்கள் இவை என்றும் தெரிவித்து உள்ளார்.

“நீங்கள் மருத்துவர்களின் எண்ணிக்கையை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாடு வேறு எந்த மாநிலத்தையும் விட மிகச் சிறந்தது” என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article