சென்னை
சென்னையில் கொரோனா பரவலுக்க் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழ்ந்துள்ளார்.

தற்போது தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.
ஆனால் வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 60) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மோகனுக்கு பல்வேறு இணை நோய் பாதிப்புகள் இருந்த நிலையில் அதற்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்ர்.
Patrikai.com official YouTube Channel