காபுல்
காபுல் நகரில் உள்ள அமைச்சக வளாகத்தில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்து 3 பேர் காயமடைந்துள்ளனர்
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான குண்டூசில் உள்ள ஒரு வங்கி அருகே நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைவர் காபுலில் உள்ள அரசு அமைச்சக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 3 பேர் காயமடைந்தனர் என நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது கமல் ஆப்கான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது குறித்து வளாகத்திற்குள் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் ஆனால் அவர் தனது இலக்கை அடைவதற்கு முன்பே காவலர்களால் கொல்லப்பட்டார் எனவும். இந்த சம்பவத்தின் போது ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரை இந்த தாக்குதல் முயற்சிக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.