சென்னை: சென்னையில் கடந்த வாரம் பெய்த ஒருநாள் கனமழையால், குப்பை அள்ள பயன்படுத்தப்படும் சுமார் 150 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வார்டுகளில் குப்பை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் குப்பையை சேகரிக்கும் பணிக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு பணி ஆணை கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்டது. அதன்படி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் துப்புரவு பணிகளை உர்பேசர் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த அர்பசர் சுமீத் நிறுவனத்துடன் இணைந்து, குப்பை அள்ளும் பணியை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் 30ந்தேதி மழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழையின்போது பெய்த மழையைவிட இந்த ஒருநாள் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. விட்டுவிட்டுப் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நகர் முழுவதுமே கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சென்னயின் பிரதான பகுதியான அண்ணா சாலையில் வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், அன்றைய மழையால், கும்பை அள்ளும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் அர்பசர் சுமீத் நிறுவனத்தைச் சேர்ந்த பேட்டரியில் இயங்கும் சுமார் 150 வாகனங்கள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தேனாம்பேட்டை உள்பட பல வார்டுகளில் குப்பை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுபொதுமக்கள் ஏராளமான புகார்களை மாநகராட்சிக்க அனுப்பிய நிலையில், மாற்று ஏற்பாடாக ற்ற மண்டலங்களில் இருந்து வந்த வாகனங்கள் குப்பைகளை அள்ளுவதற்காக திருப்பி விடப்பட்டன.
சென்னை: சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் அர்பசர் சுமீத் குப்பை சேகரிக்க பயன்படுத்திய சுமார் 150 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மழையால் சேதமடைந்தன.
விசாரணையில், பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதி தாழ்வான பகுதி என்றும், அதனால், அங்கு தேங்கிய தண்ணீரால், பேட்டரி பழுதடைந்து வாகனங்களை இயக்க முடியாத நிலை உருவானதாகவும் கூறப்பட்டன. வானிலை முன்அறிவிப்பு வராததாலேயே, வாகனங்களை மழையில் சிக்கிவிட்டதாகவும், முன்னறிவிப்பு கிடைத்தி ருந்தால், பேட்டரி வாகனங்களை வேறு இடத்துக்கு மாற்றி தகுந்த நடவடிக்கை எடுத்திருப்போம் என்று தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.