தராபாத்

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் நகரை பாக்யநகர் என பெயர் மாற்ற மீண்டும் ஆர் எஸ் எஸ் முயற்சி செய்யத் தொடங்கி உள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல ஊர்கள் மற்றும் சாலைகளின் பெயர்களை மாற்றி வருகிறது.  இதற்கு ஆர் எஸ் எஸ் பின்னணியே காரணம் எனக் கூறப்படுகிறது.  குறிப்பாக இஸ்லாமியப் பெயர்கள் கொண்ட இடங்களின் பெயர்களை பாஜக மாற்றி வருகிறது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரை பிரயாக் ராஜ் என மாற்றியது நினைவிருக்கலாம்.

இதைப் போல் குர்காவ்ன் என்னும் நகர் பெயர் குருகிராமம் எனா மாற்றப்பட்டுள்ளது.    சிவசேனா – பாஜக ஆட்சி செய்த போது பம்பாய் என்னும் பெயர் மும்பா தேவி என்னும் பெண் தெய்வத்தின் பெயரில் மும்பை என மாற்றப்பட்டது.   அவ்வரிசையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் ஐதராபாத் நகருக்கு பாக்யநகர் என மாற்றக் கோரிக்கை விடுத்தது.

ஆனால் அந்த ஊர் மக்களின் எதிர்ப்பையொட்டி அது கைவிடப்பட்டது.  இந்த கோரிக்கையை மிண்டும் ஆர் எஸ் எஸ் கையில் எடுத்து பெயரை மாற்ற முயன்று வருகிறது,.  இது குறித்து ஆர் எஸ் எஸ் தனது டிவிட்டரில், “வரும் ஜனவரி 5 முதல் 7 வரை ஆர் எஸ் எஸ் கூட்டமைப்புக்கள் ஆலோசனைக் கூட்டம் தெலுங்கான தலைநகர் பாக்யநகரில்  நடைபெற உள்ளது.” எனப் பதிவு இட்டுள்ளது.

இதன் மூலம் ஆர் எஸ் எஸ் தனது கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை  என்பதும் ஐதராபாத் நகரை பாக்யநகர் என மாற்ற முயல்வதாகவும் கூறப்படுகிறது.