டில்லி
மீண்டும் பாஜக தனது தமிழக வேட்பாளர் பட்டியலில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்களை அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இதில் பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. ஏற்கனவே இதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலிலும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

நேற்று அண்டை மாநிலமான புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியது., அந்த பட்டியலில் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் தமிழிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
[youtube-feed feed=1]