மும்பை
பிரபல நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன்கானுக்கு போதை மருந்து வழக்கில் மீண்டும் ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அன்று மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டார். இந்த, சொகுசு கப்பல் பார்ட்டியில் நடந்த போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார். தமக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன்கான் உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தனர். இன்று இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆர்யன்கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]