நெட்டிசன்:

மூத்த செய்தியாளர் ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan ) அவர்களி்ன் முகநூல் பதிவு:

ந்திரபாபு பற்றி பேசுவோர், பலரும் முதலிரவன்றே மனைவியின் கண்ணீருக்கு மதிப்பு தந்து காதலனுடன் பெருந்தன்மையுடன் அனுப்பி வைத்ததாக சொல்லி புளங்காகிதப்படுவார்கள்..

அது முழுக்க முழுக்க கட்டுக்கதை.. சந்திரபாபு மனைவி ஷீலாவோடு பெங்களுருவில் தேனிலவு கொண்டாடினார்..

மூன்று மாதங்கள் போன நிலையில்தான் தனக்கு காதலன் இருப்பதாகவும் அவர், தன் மனம் முழுக்க ஆட்டிப்படைப்பதால் மன அளவில் உண்மையான மனைவியாக இருக்க முடியவில்லை என்று ஷீலா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

சந்திரபாபு – ஷீலா

அதன்பிறகு பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. டைரக்டர்களில் பீஷ்மர் எனப்படும் கே.சுப்ரமணியம், எம்.ஜிஆர் போன்றோர் தலையிட்டும் சரிசெய்யமுடியவில்லை..தம்பதியர் கடைசியில் பிரிந்தேபோனார்கள். ஷீலா புதுக்கணவரோடு லண்டனில் செட்டிலாகிவிட்டார்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சந்திரபாபுவின் மனைவி, தனக்கு காதலன் இருப்பதாகத்தான் சொன்னார். ஆனால் அவன் திருமணத்திற்கு முன்பே இருந்தவனா இல்லை பின்னாடி வந்து சேர்ந்தவனா என்பதுதான் விடைதெரியாத விஷயம்..

1959ல் சினிமா உலகைவிட்டே ஓடிப்போய் டெல்லியில் தனியாக தங்கி மதுவே கதி என்று கிடக்கும் அளவுக்கு சந்திரபாபுவை பாதிக்கச்செய்தது இந்த விஷயம்தான்..பிறகு திரும்பிவந்தது இரண்டாவது இன்னிங்கை சினிமாவில் சந்திரபாபு ஆரம்பித்தது தனிக்கதை

20 ஆண்டுகளுக்கு முன்பு திரையுல ஜாம்பவான்களிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பலரும் இதே தகவலைத்தான் சொன்னார்கள்

சந்திரபாவு நினைவு தினம் இன்று